விமான பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி..!பறக்கும் போதே தூங்கும் பைலட்ஸ் -பீதியில் கலங்கும் பயணிகள்

x

66 சதவீத விமான ஓட்டிகள் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது சக பணியாளர்களுக்குக் கூட தெரிவிக்காமல் ஒரு குட்டி தூக்கம் போட்டு விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்... நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, விமானி தூங்குகிறார் என்ற செய்தி நம் காதுகளை வந்தடைந்தால்.

வேண்டாத கடவுள்களையும் வேண்ட ஆரம்பித்து விடுவோம்.

ஆனால் யாருக்கும் தெரியாமல் 66 சதவீத விமானிகள் இருக்கையில் அமர்ந்தபடியே குட்டித் தூக்கம் போடுகின்றனர் என்பது தான் நிதர்சனம்.

இதை அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும், 54.2 சதவீத விமானிகள் கடுமையான பகல் நேர தூக்கத்தால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வறிக்கையைப் படித்து விட்டு, "இனி எப்படிப்பா நிம்மதியா ஃப்ளைட்ல போறது" என்று விமான பயணிகள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்


Next Story

மேலும் செய்திகள்