சென்னை மக்களுக்கு ஓர் அதிர்ச்சி... 'சொந்த வீடு' கனவு காண்போருக்கு பேரிடி - ஒரு சதுர அடி இவ்வளவு ஏறிடுச்சா?

x

ஜனவரி முதல் மார்ச் வரையில், 8 முக்கிய நகரங்களில் வீடுகள் விலை உயர்வு பற்றிய அறிக்கையை இந்தத் தொகுப்பு அலசுகிறது.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அகில இந்திய கூட்டமைப்பான கிரெடாய், காலியர்ஸ் மற்றும் லையாசஸ் ஃபோரஸ் ஆய்வு நிறுவனங்கள் இணைந்து இந்த அறிக்கை யை வெளியிட்டுள்ளன.

புது டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் வீடுகள் விலை மார்ச் காலாண்டில், 2022 மார்ச் காலாண்டின் அளவை விட 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக டெல்லி - என்.சி.ஆர் பகுதியில் சதுர அடி விலை சராசரியாக 8,432 ரூபாயாக,16 சதவீதம் அதிகரித்துள்ளது.

அகமதாபாத்தில், சதுர அடி விலை சராசரியாக 6,324 ரூபாயாக, 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெங்களூருவில், சதுர அடி விலை சராசரியாக 8,748 ரூபாயாக, 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னையில், சதுர அடி விலை சராசரியாக 7,395 ரூபாயாக, 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஹைதராபாத்தில், சதுர அடி விலை சராசரியாக 10,410 ரூபாயாக, 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொல்கொத்தாவில், சதுர அடி விலை சராசரியாக 7,211 ரூபாயாக, 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

புனேயில், சதுர அடி விலை சராசரியாக 8,352 ரூபாயாக, 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆனால் மும்பையில், சதுர அடி விலை சராசரியாக 19,219 ரூபாயாக, 2 சதவீதம் குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்