பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர்...கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

x

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நர்சரி பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் சாலையில் இயங்கி வரும் தனியார் நர்சரி பள்ளியின் தாளாளராக 62 வயதான ராஜமாணிக்கம் உள்ளார். இவர் தன் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தில் தெரிவித்ததோடு போலீசிலும் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு மதியம் விடுமுறை அளிக்கப்பட்டதோடு பள்ளி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்