சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய ஓட்டை... நாளை 2.9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில்... - நாசா விடுத்த எச்சரிக்கை

x

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தின் ஆய்வில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது... சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய ஓட்டை கண்டறியப்பட்ட நிலையில், இதற்கு கரோனா ஓட்டை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் புவிகாந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து புறப்படக்கூடிய 2.9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்திலான சூரியக் காற்றானது நாளை பூமியை நோக்கி வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரியனில் இருந்து தொடர்ச்சியாக வரும் ஆற்றல் துகள்களால் பூமியின் காந்தப்புலம், செயற்கைக்கோள், செல்போன்கள், ஜிபிஎஸ் ஆகியவை பாதிக்கப்படக்கூடும்.


Next Story

மேலும் செய்திகள்