புதுச்சேரியில் கைதிகளை கூட்டி செல்லும் போலீஸ் வாகனத்தில் ஓட்டை

x

புதுச்சேரியில் கைதிகளை ஏற்றி செல்லும் போலீஸ் வாகனம் கடுமையாக சேதங்களுடன் இயக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. புதுச்சேரி சிறையில் இருந்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜராக கைதிகளை அழைத்து வரும் வாகனத்தின் இருக்கைகள் கிழிந்து அமர முடியாத நிலையில் உள்ளதுடன், நடைபாதைப் பகுதியில் மிகப்பெரிய துளைகளும் காணப்படுகின்றன... இது குறித்து காவல் வாகன அதிகாரியிடம் புகார் அளித்தும் கூட கண்டு கொள்ளப் படவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் "பாதுகாப்பு பணிக்கு இந்த வாகனத்தில் வர முடிந்தால் வாருங்கள் இல்லை என்றால் செல்ல வேண்டாம்" என்று தாங்கள் அலட்சியம் செய்யப்படுவதாக காவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்