லாரி ஏற்றிக் கொல்ல வந்த கும்பல்...ரத்த வெள்ளத்தில் கிடந்த சமூக ஆர்வலர் - புகாரால் நடந்த விபரீதம்

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, சமூக ஆர்வலர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவத்தில், லாரி உரிமையாளர், ஓட்டுநர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான செந்தில்குமார் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கனிம வளம், வருவாய்துறையில் மனுக்கள் அளித்து முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நால்ரோடு - நத்தக்காடையூர் சாலையில், செந்தில்குமார் காரில் சென்று கொண்டிருந்த போது, டிப்பர் லாரியை கொண்டு 2 பேர் மோதியுள்ளனர். மேலும், செந்தில்குமாரை, சுத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு, லாரியில் வந்த நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் லாரி உரிமையாளரான வெங்கடேஷ் மற்றும் லாரி ஓட்டுநரை கைது செய்த நிலையில், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்