திரைப்பட பாணியில் வனத்துறையினர் போட்ட ஸ்கெட்ச் | யானை தந்தங்களை விற்க முயன்ற 2 பேர் கைது

x

செங்கல்பட்டை சேர்ந்த சதீஷ்குமார், ஏற்கனவே வனவிலங்குகள் தொடர்பாக சிறையில் இருந்து விடுதலை ஆனவர்.

தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்த சதீஷ்குமார், யானை தந்தங்களை விற்க முயற்சி செய்வது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு பேசிய சென்னை வனத்துறையினர், யானை தந்தங்களை வாங்குவது போல பேசி, அவரை பிடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

பின்னர், வேலூருக்கு வருமாறு சதீஷ்குமார் கூறிய நிலையில், வேலூர் வனத்துறையினர் உதவியுடன், சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளி ஜெயக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்த 16 கிலோ தந்தத்தையும், காரையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர், இருவரையும் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்