தமிழகத்தில் 2 ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்போடு வாழும் ஒரு விவசாயி - "பாதுகாப்பை விலக்கினால் ஆபத்து"

x

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயியான இவர், கனிமவள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார். அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்ததால், அவருக்கு மணல் மாஃபியாக்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால், அச்சுறுத்தல் இல்லை என காவல்துறையினர் கூறிய நிலையில், கொலை மிரட்டல் இருப்பதை உறுதி செய்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு பரிந்துரைத்தனர். தற்போது பாலகிருஷ்ணன் எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் பாதுகாப்புடன் இருக்கிறார். இந்நிலையில், அகரம் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முறப்பாடு கிராமத்தில், மணல் கொள்ளையை தடுக்க முயன்ற விஏஓ லூர்து பிரான்சிஸ் பணியில் இருந்த போதே படுகொலை செய்யப்பட்டிருப்பதால், அதிகாரிகளுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டால், விஏஓவுக்கு நேர்ந்த அதே நிலைதான் தனக்கும் ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ள அவர், மணல் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்