தவித்து நின்ற பிரபல யூடியூபர்... ஒரே ஒரு SMS - அடுத்து நடந்த அதிரடி

x

யூடியூப் சேனல் நடத்தி வரும் தேவராஜ் என்பவர், புதுச்சேரியில் உள்ள உணவக வாயிலில், தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை விட்டுச் சென்றபோது மாயமானது.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, தேவராஜ் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், சென்னை அடையாறு பகுதியில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதன் காரணமாக, 500 ரூபாய் அபராதம் செலுத்த சொல்லி, தேவராஜின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதனை அடிப்படையாக வைத்து, சென்னை அடையாறு போலீசாரிடம் சென்ற தேவராஜ், நடந்ததை கூறி, அபராதம் விதிக்கும் போது பெறப்பட்ட அந்த நபரின் ஓட்டுநர் உரிம விவரத்தை பெற்றுள்ளார்.

அதனை வைத்து, பூந்தமல்லி ஆர்டிஓ அலுவலகத்தில் பணியாற்றும் தனது நண்பர் மூலம் விசாதித்தபோது, விழுப்புரத்தை சேர்ந்த சதீஷ் என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரித்தபோது, சென்னை சைதாப்பேட்டையில் சதீஷ் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதுடன், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்