லிப்ட்டில் சிறுவனை சரமாரியாக கடித்த நாய் - மாநகராட்சி நிர்வாகம் அதிரடி | Dog | ThanthiTV

x

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் குழந்தை ஒன்றை நாய் கடித்த சம்பவத்தில், நாயின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள லிஃப்ட்டில் வைத்து 6 வயது குழந்தையின் கையை நாய் ஒன்று கடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து, ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததன் படி, நாயின் உரிமையாளருக்கு நொய்டா மாநகராட்சி நிர்வாகம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதோடு, குழந்தையின் சிகிச்சை செலவை முழுவதுமாக ஏற்கவும் நாயின் உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்