"என்னைய விட்டுட்டு செல்ஃபியா?" ஓடி வந்து "போஸ்" கொடுக்கும் பசுமாடு... இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

துருக்கியின் செய்டிகேமர் நகரில் இளம்பெண் ஒருவர் செல்போனில் செல்ஃபி எடுக்க... தூரத்தில் இருந்து ஓடி வந்த பசுமாடு செல்ஃபிக்கு அழகாக போஸ் கொடுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. துருக்கியின் தென்மேற்கு நகரமான செய்டிகேமரில் உள்ள பண்ணையை நடத்தி வரும் Serife Yilmaz தனது பசுமாடான Meltemற்கு செல்ஃபி எடுக்க பயிற்சி கொடுத்துள்ளார்... அதன்படி, எப்போதெல்லாம் Serife செல்ஃபி எடுக்கிறாரோ... அப்போதெல்லாம் Meltem ஓடி வந்து போஸ் கொடுத்து விடுகிறது... Meltemஐப் போலவே பிற மாடுகளும் போட்டோவிற்கு மனிதர்களை விட அழகாக போஸ் கொடுக்கின்றன...


Next Story

மேலும் செய்திகள்