யூடியூப் சேனல் தொடங்கி பகீர் காரியம் செய்த கோவை ஜோடி

x

கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ், ஹேமலதா தம்பதியினர், கடந்த 2020-ம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி , மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கும் என பதிவு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும், அந்த யூடியூப் சேனலில்,1,200 ரூபாய் முதலீடு செய்தால், ஆயிரத்து 500 ரூபாய் திருப்பி தரப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி, பலரும் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினர். ஆனால், அந்த தம்பதியினர் அறிவித்தப்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தம்பதியினர் இருவரும் 42 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ரமேஷ், ஹேமலதா உட்பட 3 பேரை கைது செய்த போலீசார், 45 சவரன் நகைகள்,1 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்..


Next Story

மேலும் செய்திகள்