அடிபட்டு கிடந்த நாரைக்கு உயிர் கொடுத்த இளைஞர்..காப்பாற்றியவர் மீது உயிரையே வைத்த நாரை! - பாசப்பிணைப்பை பிரித்த சட்டம்..?

x

உத்தரப் பிரதேசத்தில் காயம் அடைந்த நாரையை குணப்படுத்தி வளர்த்து வந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமேதி மாவட்டம் மந்தா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆரிஃப் கான் குர்ஜர், கடந்த ஆண்டு தனது தோட்டத்தில் காயத்துடன் கிடந்த நாரையை மீட்டு முதலுதவி செய்தார். தன் உயிரைக் காப்பாற்றிய ஆரிஃப் மீது உயிரையே வைத்த அந்த நாரை அவருடனேயே தங்கத் துவங்கியது. ஆரிஃபின் குடும்ப உறுப்பினராகவே அந்த நாரை மாறி விட்ட நிலையில், இது இணையத்தில் வேகமாகப் பரவவே, ஆரிஃபிடம் இருந்து அந்த நாரையை வாங்கிய வனத்துறையினர் அதை சமஸ்புர் சரணாலயத்திற்கு அழைத்துச் சென்றனர்... இந்நிலையில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆரிஃப் மீது வழக்குப்பதியப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 2ம் தேதி இது குறித்து விளக்கமளிக்க வனத்துறை உத்தரவிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்