ரயில்வே மேம்பாலத்தில் சென்ற கார்..தண்டவாளத்தில் தலைகுப்புற விழுந்து கோர விபத்து - அதிர்ச்சி காட்சி

x

கன்னியாகுமரி அருகே தண்டவாளத்தில் தலைகுப்புற கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த வர்கீஸ் என்பவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது நெய்யூர் ரயில்வே மேம்பாலத்தை கடந்து செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் தண்டவாளத்தில் தலைகுப்புற விழுந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், விபத்து காரணமாக ஒருமணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்