கள்ளச்சாராயத்தை ஊற்றி பார்சல் கட்டும் சிறுவன் - வெளியான பரபரப்பு வீடியோ

x

திருப்பத்தூர் அருகே கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்குமாறு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், சாமகவுண்டனூர் பகுதியில் சிவராஜ் மற்றும் அவரது அண்ணன் மனைவி அம்சா ஆகியோர் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இவர்கள் கள்ளச்சாராயம் தயாரிக்கும் பணியில் சிறுவனை பயன்படுத்துவதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்