கொடைக்கானலில் திடீரென சரிந்து விழுந்த 50 அடி உயரமுள்ள ராட்சத சுற்றுச்சுவர்

x

கொடைக்கானல் அருகே சின்னப்பள்ளம் பகுதியில் செல்லக்கூடிய சாலையில் சரிந்து விழுந்த ராட்சத சுவரால் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

தனியார் சொகுசு விடுதியின் சுமார் 50 அடி உயரமுள்ள ராட்சத சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக நள்ளிரவில் சரிந்து விழுந்த சுவரால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது வரை சாலையில் சிதறி கிடக்கும் கருங்கற்கள் அகற்றப்படாததால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

மேலும், இது போன்று பாதுகாப்பின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்