17 வயது சிறுமிக்கு இன்ஸ்டாவில் வந்த வினை..இளைஞருடன் ஒன்றாக தங்கிய சிறுமி..?

x

தேனியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட 17 வயது சிறுமியின் புகைப்படத்தை, மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட போவதாக மிரட்டிய இளைஞரை போக்சோவின் கீழ் போலீசார் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை, உளுந்தாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் நெருங்கி பழகி வந்த நிலையில், சிறுமி தன்னுடைய புகைப்படத்தை இளைஞருக்கு ஷேர் செய்ததாக தெரிகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு சிறுமி உளூந்தூர் பேட்டைக்கே வந்து இளைஞருடன் தங்கியதாகவும், சிறுமியின் பெற்றோர் சிறுமியை கண்டித்து அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் பெற்றோருக்கு போன் செய்த இளைஞர், 70 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், பணம் தரவில்லை என்றால் சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக பயமுறுத்தியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்த நிலையில், இளைஞர் சதீஸ்குமாரை போக்சோவின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்