13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... டியூஷன் மாஸ்டர் மீது பாய்ந்த போக்சோ

x

வேலூரில், டியூஷனுக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, டியூஷன் மாஸ்டர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாநகருக்குட்பட்ட பகுதியில் தனியார் டியூசன் சென்டர் நடத்தி வரும் மீர் பாஹர் அலி என்பவர், 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மீர் பாஹர் அலியை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்