இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (27-08-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மத்திய அரசின் 7 திட்டங்களில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று குற்றச்சாட்டு...ஊழலைப் பற்றி பேச பிரதமருக்கு தகுதியில்லை எனவும் விமர்சனம்...

மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் இன்று லக்னோ அனுப்பிவைப்பு...விபத்தின் போது ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றவர்களிடம் ரயில்வே பாதுகாப்பு படை இன்று தீவிர விசாரணை...சதித்திட்டம் எதுவும் இல்லை என தகவல்...

நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்கிறது சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர்....10 சென்சார் கருவிகள் மூலம் ஆய்வு செய்வதாகஇஸ்ரோ அறிவிப்பு...

சென்னை எழும்பூர் - கடற்கரை 4வது ரயில் பாதை திட்ட பணிகள் எதிரொலி...வேளச்சேரியில் இருந்து பறக்கும் ரயில் சேவை இன்று முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் அவதி...

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு...சிறுவனின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...துறை ரீதியாக விசாரணை நடத்தவும் அறிவுறுத்தல்...

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எச்சரிக்கை பலகை...நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து என்எல்சி இன்று நடவடிக்கை...


Next Story

மேலும் செய்திகள்