இன்றைய தலைப்பு செய்திகள் (11-09-2023) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு......

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர்களுக்கு வீட்டுக்காவல்.........

------------

ஆந்திராவில் முழுஅடைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க முக்கிய பகுதிகளில் போலீசார் குவிப்பு.........

வாகனப் போக்குவரத்து தடையின்றி சீரான இயக்கப்படுவதாக போலீசார் தகவல்.........

------------

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் காவலில் வைக்க விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவு..........

விசாரணை கைதி எண் 7691 வழங்கி, ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைப்பு..........

-----------

சந்திரபாபு நாயுடுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கியதை இனிப்பு வழங்கிய கொண்டாடிய சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா...

கட்சித் தொண்டர்களுடன் பட்டாசு வெடித்து உற்சாகம்...

-------

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு, உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைகிறது மணிமண்டபம்...

-------

சென்னை உத்தண்டியில் ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியை காண ஐம்பதாயிரம் பேர் உட்காரும் இடத்தில் 2 லட்சம் பேர் திரண்டதால் பரபரப்பு.....

நிற்கவும் இடமில்லை, நிகழ்ச்சியை பார்ககவும் முடியவில்லை என ரசிகர்கள் குமுறல்............

------

அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு...

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை...

-------

சென்னை எழும்பூர் மற்றும் மந்தைவெளியில் இரண்டு பேர் வெட்டி படுகொலை...

ஒரே இரவில் நடந்த இருவேறு சம்பவங்களால் பரபரப்பு...


Next Story

மேலும் செய்திகள்