இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்களில்.. வெளியான புதிய தகவல்

x

இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் ராஜேவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். அப்பொழுது, 2014ம் ஆண்டு இந்தியர்கள் பயன்படுத்திய 92 சதவீத செல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றார். தற்பொழுது அந்த நிலை மாறி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 97 சதவீத செல்போன்களை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறினார். மேலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் மதிப்பு 12 பில்லியனை எட்டியுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்