இன்றைய தலைப்பு செய்திகள் (12-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காட்டம்....பாஜக உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை...அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லையென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்...

இந்தியை திணிப்பதிலேயே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கண்டனம்...நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீடு நிறுவனம் இந்தியில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி விமர்சனம்...

மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது கலந்தாய்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு...மனித உரிமைகளை மீறும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று குற்றச்சாட்டு...

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி...காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி...


Next Story

மேலும் செய்திகள்