9 MLA தகுதி நீக்கமா..? சபாநாயகரிடம் பறந்த மனு நோட்டீஸ்

x

கட்சியில் கிளர்ச்சித் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என, தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த சரத்பவார், துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரிடம் இருந்து தனக்கு அழைப்புகள் வந்ததாக தெரிவித்துள்ளார். அடுத்த 3 நாட்களுக்குள் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன், விவாதிக்க உள்ளதாக சரத்பவார் குறிப்பிட்டார். கட்சியை மீண்டும் பலப்படுத்த பாடுபடுவோம் என்று கூறிய சரத்பவார், கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து, கிளர்ச்சித் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்