Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2023) | Morning Headlines | Thanthi TV
x

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறுகிறது...இரண்டு தினங்களாக சர்ச்சை நீடித்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தல்...

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவினர், அமைச்சர் முன்னிலையில் தீக்குளிக்க முயற்சி...அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு விழா நடத்த அனுமதிக்காவிட்டால் தொடர் போராட்டம் எனவும் அறிவிப்பு...

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்ததாக அமைச்சர் சக்கரபாணி தகவல்...பரிசு தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லை எனவும் திட்டவட்டம்...

பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்புகளை வெட்டிய பின்னும் கொள்முதல் செய்யாமல் தாமதம் செய்கின்றனர்..அதிகாரிகள் மீது கடலூர் மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு...

பொங்கலையொட்டி தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை...போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை...

ஆளுநருக்கு இன்று அல்லது நாளை நோட்டீஸ் அனுப்பப் போவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிவிப்பு...60 நாட்கள் பொறுத்திருந்து பார்த்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எனவும் தகவல்...

வரும் 11ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு வெளியாகிறது 'துணிவு' சிறப்புக்காட்சி...அதிகாலை 4 மணிக்கு சிறப்புக்காட்சியாக வெளியாகிது வாரிசு...

வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு முதல் காட்சிக்கான டிக்கெட், 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை...பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி..

நீண்ட இடைவெளிக்கு பின் பொதுவெளியில் நடிகை சமந்தா...விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்...Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2023) | Morning Headlines | Thanthi TV


Next Story

மேலும் செய்திகள்