Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-12-2022) | Morning Headlines | Thanthi TV

x

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த ஸ்ரீவில்லிபுத்துரைச் சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா...விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் பரிசோதனை...

மருத்துவமனைகளில் 80% ஆக்சிஜனை இருப்பு வைக்க வேண்டும்...கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு...

புதுச்சேரியில் பொது இடங்கள், திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம்...டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை....

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கட்டாயாம் முக கவசம் அணிய வேண்டும்...வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருவதால், தேவஸ்தானம் அறிவிப்பு...

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவடைந்ததால் நேற்று இரவு நடை சாத்தப்பட்டது...மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30ஆம் தேதியன்று மீண்டும் நடை திறக்கப்படுகிறது...

இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்...கேரள கடலோரம், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை..

ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 5ஆம் தேதி முதல் வழங்கப்படும்..பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வருகிற 30ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என அறிவிப்பு

பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு...


Next Story

மேலும் செய்திகள்