Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-12-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-12-2022) | Morning Headlines | Thanthi TV
x

"அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது..." - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...அதிகபட்சமாக, நேற்று குன்னூரில் 30 சென்டி மீட்டரும், நீடா மங்கலத்தில் 16 சென்டி மீட்டரும் மழை பதிவு...

66 அடியாக உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டம்...கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

தமிழகத்தை விளையாட்டுத் தலைநகரமாக மாற்ற முயற்சிப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி...விமர்சனங்கள் பல வந்தாலும், செயல்திறன் மூலம் முறியடிப்பேன் எனவும் திட்டவட்டம்...

தமிழக அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10ஆவது இடம்... நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு 27ஆவது இடம்...சட்டப்பேரவைக்குள் அமைச்சர்களுக்கான இரண்டு வரிசைகளில் முதல் வரிசையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.....

திறமை இருப்பவர்கள் முடி சூட்டிக் கொள்வார்கள் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி...வாரிசுகளுக்கு திறமை இருப்பதால் அரசியலுக்கு வருவதாகவும் கருத்து...

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு மற்றும் கேக் விற்பனை துவக்கம்...விற்பனையை தொடங்கி வைத்தார் பால்வளத்துறை அமைச்சர் நாசர்...

தமிழகத்தில் ஒரு கோடியே 2 லட்சம் மின் இணைப்புகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன...மின்சார வாரியம் தகவல்...

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக ஈ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு...உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை...

நீதித்துறையை பயன்படுத்தி அதிமுகவை முடக்க முயற்சி நடப்பதாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு...உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் எனவும் நம்பிக்கை..


Next Story

மேலும் செய்திகள்