31 நிமிடத்தில் 63 செய்திகள்... காலை தந்தி செய்திகள்

x

சென்னை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது..

கல்வி, மக்கள் நலம் தேடுவதில் மிக சிறந்த மாநிலமாக தலை நிமிர்ந்து நிற்கும் தமிழகத்தின் வளர்ச்சி, மாநிலத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு மட்டும் புலப்படவில்லை என்று, ஆளுநரை முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாத நிலையில், தினம் தோறும் எதாவது ஒரு செய்தியை கூறி மக்களை குழப்பிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

துணைவேந்தர்கள் மாநாட்டை அரசியலுக்காக ஆளுநர் பயன்படுத்தி உள்ளார் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்து உள்ளார். கல்வி,வேலைவாய்ப்பு, தொழிலில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், உண்மைக்கு மாறாக ஆளுநர் பேசி வருவதாக கூறினார். முழு நேர அரசியல்வாதியாக ஆளுநர் மாறி உள்ளதாகவும், அரசியல் விருப்பம் இருந்தால் ஆளுநர் மாளிகையை பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார்..

2024 மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக வரும் 12-ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டம் இறுதியானால், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

தஞ்சையில் நடைபெறவுள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தின் மகன் திருமணத்தில், சசிகலா பங்கேற்காததால், ஓ.பி.எஸ் - சசிகலா சந்திப்பு தள்ளிப்போகிறது. ஏற்கனவே அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று அழைப்பு விடுத்த வைத்திலிங்கம், கடந்த மே 31 ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா இல்லத்துக்கு சென்று நேரில் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், திருமணத்தில் ஓ.பி.எஸ் - சசிகலா சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா செல்லவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக செல்லவில்லை என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்