30 நிமிடத்தில் 60 செய்திகள்... காலை தந்தி செய்திகள்

x

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - ஆளுநர் ஒப்புதல்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நாளை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், சைதைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த‌து, மத சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என கூறப்பட்டுள்ளது. ஆளுநரின் சனாதன ஆதரவு பேச்சுகளை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுவதாக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடியை வரவேற்றதால், திமுக தனது நிலைப்பாட்டில் இருந்து விலகிவிட்டது என சந்தேகப்பட தேவையில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி என்ற முறையில், அரசு மரபுகளின்படி பிரதமரை திமுக வரவேற்றதாக அவர் கூறியுள்ளார். திமுகவின் அணுகுமுறையில்தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் இரவு நேரத்திலும் திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .



Next Story

மேலும் செய்திகள்