துணிக்கடைக்கு ஆசைப்பட்டு வக்கீலுக்கு பறிபோன ரூ.60 லட்சம்

x

துணிக்கடைகள் அமைத்து தருவதாகக் கூறி, வழக்கறிஞரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, ஈரோட்டில் போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் மணிராஜ் - சாந்தி தம்பதியினர். தமிழகம் முழுவதும் துணிக்கடைகள் திறக்க உள்ளதாக நாளிதழ்களில் இந்த தம்பதியினர் விளம்பரம் செய்துள்ளனர். அதில் தமிழகம் முழுவதும் விற்பனையங்கள் அமைத்து தரப்படும் என்றும், அதற்காக ஒரு விற்பனையகத்திற்கு 15 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி, திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் அரசபிரபாகரன் என்பவர், கடந்த 2020ம் ஆண்டு மணிராஜ் - சாந்தி தம்பதியின் வங்கிக் கணக்கில் 60 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால் கூறியபடி விற்பனையகத்தை அமைத்துத் தராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அரசபிரபாகரன், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், மணிராஜ் - சாந்தி தம்பதியினரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான மணிராஜ், ஏற்கனவே ஈமு கோழி நிறுவனத்தை நடத்தி, பொதுமக்களிடம் 66 கோடி ரூபாய் முதலீடாக பெற்று மோசடி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்