காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26 -01-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி காலமானார்...

இலங்கையில் உள்ள மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது...

கொழும்பு நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல், நள்ளிரவில் எடுத்துச் செல்லப்பட்டது...

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டது

இலங்கையில் உயிரிழந்த பவதாரிணியின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது...

இலங்கையில் இளையராஜா இருக்கும் நிலையில், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு இருவரும் இலங்கை சென்றனர்...

பின்னணி பாடகி பவதாரிணி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்......

தேனினும் இனிய குரல் வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் என புகழஞ்சலி....

பவதாரிணி மறைவு இசைத் துறைக்குப் பேரிழப்பு என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இரங்கல்...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., திமுக எம்.பி. கனிமொழி, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்