காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-12-2023) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 7 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு...

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்...

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்...

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்...

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84 புள்ளி 5 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவு...

திருச்செந்தூரில் 66 புள்ளி 9 சென்டிமீட்டரும், ஸ்ரீவைகுன்டத்தில் 60 புள்ளி 7 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக தகவல்...

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 59 புள்ளி 7 சென்டிமீட்டர் மழை பதிவு...

பாளையங்கோட்டையில் 42 புள்ளி2 சென்டிமீட்டரும், அம்பாசமுத்திரத்தில் 41 புள்ளி 6 சென்டிமீட்டரும் மழை பதிவானதாக அறிவிப்பு...



Next Story

மேலும் செய்திகள்