29 நிமிடத்தில் 58 செய்திகள்... காலை தந்தி செய்திகள்

29 நிமிடத்தில் 58 செய்திகள்... காலை தந்தி செய்திகள்
x

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநருக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வர உள்ளார். அதில், மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட உள்ளது


கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாஜக-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 2 பட்டியல்களை வெளியிட்ட நிலையில், கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


ஆண்டவனே சொன்னாலும், காவிரி டெல்டா பகுதியில், நிலக்கரி சுரங்கத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈபிஎஸ் கொண்டுவந்த சட்டத்தால் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறினார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதால் திட்டம் ரத்தாகவில்லை என செல்லூர் ராஜூ கூறினார்.

நெல்லை அருகே அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் 12 சிறுவர்கள் பாதுகாவலரை தாக்கி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், நகரில் உள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மார்க்கெட்களில் சிறுவர்களை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்