குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் தரும் அதிர்ச்சித் தகவல்

x

குஜராத் மாநிலத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் விட்டனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2016-ல் 7 ஆயிரத்து 105 பெண்களும், 2017-ல் 7 ஆயிரத்து 712 பெண்களும், 2018-ல் 9 ஆயிரத்து 246 பெண்களும், 2019-ல் 9 ஆயிரத்து 268 பெண்களும் காணாமல் போயுள்ளனர். பெண்களை கடத்திச் சென்று வேறு மாநிலங்களில் விற்பனை செய்வதுதான் இதற்கு காரணம் என்று

முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் ராஜன் பிரியதர்ஷி கூறியுள்ளார். இதுகுறித்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா கூறும்போது, சிலர் காணாமல் போன வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் மற்ற மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருவதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்