ஒரே நேரத்தில் அட்டாக் செய்யும் 4 காய்ச்சல்கள்.. ஒரே நாளில் 4 பேர் பலி..

x

கேரளாவில் காய்ச்சல் பாதிப்பால் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த‌னர்.

கேரளாவில் கடந்த மே முதல் டெங்கு, எலிகாய்ச்சல், டைப்பாய்டு, சிக்குன் குனியா, மலேரியா, எச்1என்1 நிமோனியா மற்றும் வைரல் காய்ச்சல் பரவி வருகிறது.

தற்போது 13 ஆயிரத்து 248 பேர் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், 77 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 9 பேருக்கு எலிக்காய்ச்சலும், 10 பேருக்கு எச்1என்1 காய்ச்சலும், 2 பேருக்கு மலேரியாவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பருவமழையால் காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில், தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்