இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி.20 போட்டி; இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி

x

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி.20 போட்டி; இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை, இந்திய மகளிர் அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

கான்டர்பெர்ரியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடி சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர், 143 ரன்கள் குவித்தார். பின்பு விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, இரண்டுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்று, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இரு அணிகளும் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, வரும் 24 ஆம் தேதி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்