2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் உறுதிமொழி கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தது ஈபிஎஸ் தரப்பு

x

2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் உறுதிமொழி கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தது ஈபிஎஸ் தரப்பு

2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடித‌த்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்த தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்த‌து குறித்து, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் உறுதிமொழி கடிதம் சம்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை, சுய விருப்பத்தின் படியும், முழு மனதுடன் தேர்வு செய்த‌தாக சுமார் 2 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்த கடித‌த்தை அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்