இன்று CSK ரசிகர்களுக்கு 2 அதிர்ச்சி.. ஒரு குட் நியூஸ்

x

ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில், சென்னை-ராஜஸ்தான் அணிகள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த ஜடேஜா, காயம் அடைந்துள்ள தீபக் சஹாரும், பென் ஸ்டோக்ஸும் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என தெரிவித்தார். சென்னை அணியின் கேப்டனாக 200வது போட்டியில் களமிறங்கும் தோனிக்கு, வெற்றியை பரிசளிப்போம் எனவும் ஜடேஜா நம்பிக்கை தெரிவித்தார். இன்றைய போட்டி, இரு அணிகளிலும் உள்ள தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இடையேயான, யுத்தமாக இருக்கும் எனவும் ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்