ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள்...விரக்தியில் கணவன் - மனைவி...தாயின் விபரீத முடிவால் பரபரப்பான ஊர்

x

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரீஷ் - சரளா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் சரளா மற்றும் அவரது கணவர் விரக்தியில், இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிலிருந்து மாயமான சரளா, அதேபகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுக்குறித்து தகவலறிந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், தீயணைப்புத்துறையினரின் உதவியோடு இரண்டு பெண் குழந்தைகளின் சடலங்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்