ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

x

ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பரமக்குடியில் வரும் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவுதினம், அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜை அனுசரிக்கப்பட உள்ளது. இதனால், சட்ட ஒழுங்கு பாதுகாப்புக்காக செப்டம்பர் 9ந்தேதி முதல் செப்டம்பர் 15ந்தேதி வரையிலும் மீண்டும் செப்டம்பர் 25ஆம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 31ந் தேதி வரை144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்