12வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை... காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் - கொலையில் 2 சிறுமிகளுக்குத் தொடர்பு?

x

ஜெர்மனியில் 12 வயது சிறுமி கொல்லப்பட்ட விவராகத்தில் 2 குழந்தைகளுக்கு சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது...

லூயிஸ் என்ற சிறுமியின் சடலத்தை காவல்துறையினர் வனப்பகுதியில் கண்டறிந்தனர்... சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய நாள், லூயிஸ் தனது தோழியை சந்திக்க சென்றதாக அவரது பெற்றோர் போலீசில் தெரிவித்தனர். லூயிஸ் உடலில் கத்திக்குத்துக் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஆயுதம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கொலையில் 2 சிறுமிகளுக்குத் தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்... இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுமிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்