இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31-07-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வரும் 5- ந்தேதி நீலகிரி மாவட்டத்திற்கு வருகை...

முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவளிக்கிறார்....

வரும் 6-ந்தேதி மாலை வரை, டிரோன்கள் பறக்க தடை...

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அகரம் மார்கெட் தெரு மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆறரை கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்...

பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே அரசு சார்பில் தோழி விடுதி தொடக்கம்...

பெண்கள் நன்றாகப் படித்து, பெற்றோரை பெருமை அடையச் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...

பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய நிதியில் இருந்து ஆயிரத்து 560 கோடி ரூபாயை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்காக மாற்றுவதா...?...

சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் பதிவு...

பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டிய பயன்களுக்கான நிதி தனியாக ஒதுக்கப்படுகிறது... அந்த நிதியை அப்பிரிவு மக்களுக்கு மட்டுமே செலவிட முடியும்...

இந்த தனி ஒதுக்கீடு முறையை தான் ஒன்றிய அரசும், பிற மாநிலங்களும் பின்பற்றுவதாக தமிழக அரசு விளக்கம்...


Next Story

மேலும் செய்திகள்