இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

சென்னையில் இரவில் வெளுத்து வாங்கிய கனமழை....

வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் நிம்மதி....

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், மேடவாக்கம், நீலாங்கரை பகுதிகளில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை...

மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம்...

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு.....

இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அறிக்கை.....

செந்தில்பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை.....

ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், செந்தில்பாலாஜி அமைச்சராக நீடித்தால் விசாரணை நியாயமாக நடைபெறாது என்றும் அறிக்கையில் தகவல்....

அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை....

ஆளுநரின் அறிவிப்பை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி....

நீதிமன்ற காவலில் இருப்பதால் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவியை பறிக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.....

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்