இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-12-2022)

x

மத்திய அரசுப்பணி நியமனங்களில் தமிழர்களுக்கான வாய்ப்புகளை, உறுதி செய்யுங்கள்...பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தல்...

ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 2க்கு பதில் ஐந்தாம் தேதி முதல் வழங்கப்படும்...30ம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி அறிவிப்பு...

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு....புதன்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு...

தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியது சுகாதாரத்துறை...ஆக்சிஜன் டாங்கிகளில் 80 சதவிகிதம் வரை இருப்பு வைக்க உத்தரவு...

நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று தடுப்பு ஒத்திகை...டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் மத்திய அமைச்சர் மண்சுக் மாண்டவியா நேரில் ஆய்வு...

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்....வைகுண்ட ஏகாதசியில் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு...

நாசிவழி கொரோனா தடுப்பு மருந்துக்கு விலையை நிர்ணயித்தது பாரத் பயோடெக் நிறுவனம்...தனியார் மருத்துவமனைகளுக்கு 800 ரூபாய்க்கும், அரசு மருத்துவமனைகளுக்கு 325 ரூபாய்க்கும் விற்பனை என அறிவிப்பு...

கொரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த டெல்லி அரசு உத்தரவு...ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்ததால் உத்தரவு வாபஸ்...

ஓ.பி.எஸ் அளித்துள்ள வக்கீல் நோட்டீஸ் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது....அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்...

ராகுல்காந்தி பாணியில் நாடு முழுவதும் நடை பயணத்தை தொடங்கினார் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா....ஒற்றுமை பயணத்தால் காங்கிரஸ் வெற்றி பெறப்போவதில்லை என்றும் கருத்து...

ஆதிதிராவிடர் நலனுக்கான நிதி வீணடிக்கப்படவில்லை....பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மறுப்பு...

விவசாயிகளை அகதிகளாக்கிவிட்டு ஏற்படுத்தப்படும் தொழில் வளர்ச்சி யாருக்கானது....தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி....


Next Story

மேலும் செய்திகள்