இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-09-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

நாட்டின் சொத்துக்களை கொள்ளை அடித்தவர்கள் சிறையில் இருக்க வேண்டும்...

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சூளுரை...

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம், ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்...

ராமர் கோயிலின் தரை தள கட்டுமான பணி டிசம்பருக்குள் நிறைவடையும் என கட்டுமான குழுத் தலைவர் அறிவிப்பு...

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர், தனி தேடுதல் குழுவை அமைத்து இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு...

சென்னை பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு அமைக்கப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு அறிக்கை...

ஆளுநர் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாக அறிக்கையில் புகார்...

பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரை தவிர்த்து தேடுதல் குழுவை நியமிக்க உயர் கல்வித் துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் ஆளுநர் ரவி குற்றச்சாட்டு...

தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்...

சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்