இன்றைய தலைப்பு செய்திகள் (22-01-2023)

இன்றைய தலைப்பு செய்திகள் (22-01-2023)
x


கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு...திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் கோகுல் ராஜின் உடல் கிடந்த ரயில்வே தண்டவாளம் பகுதிகளை பார்வையிட்டனர்.....

சென்னையில், ஓடும் ரயிலின் படியில் அமர்ந்திருந்திருந்த இளைஞரின் செல்போனை பறிக்க முயன்ற மர்ம கும்பல்...ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

சென்னை ஆவடியில் நடைபெற்ற ரயில்வே உடல் தகுதி தேர்வில் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பங்கேற்றதாக தகவல்..மொத்தம் 4 ஆயிரத்து 500 பேரில், 500க்கு குறைவாகவே தமிழர்கள் இருப்பதாக தமிழ்நாட்டு இளைஞர்கள் குற்றச்சாட்டு...

திண்டுக்கல் அருகே நடைபெற்ற சேவல் கண்காட்சி. கண்காட்சியில் 400-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு...மூன்று லட்சம் ரூபாய் வரை விலை போன சேவல்...

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த, 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்...முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

செங்கல்பட்டு அருகே செப்டிக் டேங்கில் விழுந்து 6 வயது சிறுவன் பலி....ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திறந்து கிடந்த செப்டிக் டேங்கால், விபத்து.....

அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவில், காவடி கிரேன் சாய்ந்து விபத்து....கூட்டத்தில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்.....

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுக, மோடி அமித்ஷா கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளது...விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சனம்...

விட்டு கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு குஜராத் வாழ் தமிழர்கள் தான் உதாரணம்...அகமதாபாத்தில் நடந்த பொங்கல் விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேச்சு...

இரட்டை இலைச் சின்னம், ஈபிஎஸ் அணிக்கே கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை....அதிமுக தொண்டர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பேச்சு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கை சின்னத்திற்கு ஆதரவாக இரண்டாவது நாளாக திமுகவினர் பிரச்சாரம்...அமைச்சர் முத்துசாமி தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு...

தம்மை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ் தலைமையின் முடிவை ஏற்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி..இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை....

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி...அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிப்பு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, தேர்தல் பணிக் குழுவை அமைத்தது திமுக....12 அமைச்சர்கள் உள்பட 32 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு.....


Next Story

மேலும் செய்திகள்