இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-01-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்...புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்கு படையலிட்டு வழிபாடு...

சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பொங்கல் விழா கொண்டாட்டம்...பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபாடு...

மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து, சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...150-க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து கோலாகலம்...

சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் ஒன்று கூடி, மாநில உரிமையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்...அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து...

சென்னை கோபாலபுரம் இல்லத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை...தாயார் தயாளு அம்மாளிடம், மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து ஆசி பெற்றார்...

தமிழ்நாடெங்கும் பொங்கும் இன்பப் பொங்கல், ஈகைப் பொங்கல், சமத்துவப்பொங்கல் இந்த ஆண்டு முழுவதும் பொங்கட்டும்...முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளம் வாயிலாக வாழ்த்து...

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து, கிடுகு ருத்ர ராஜூ விலகல்...சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஓய்.எஸ்.ஷர்மிளா மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் நியமிக்கப்படலாம் என தகவல்...

16, 17ம் தேதிகளில், ஆந்திரா, கேரளாவில் பிரதமர் சுற்றுப்பயணம்...பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்...

தங்க திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிப்பு......பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவமாக காட்சியளித்தார் ஐயப்பன்... பக்தர்கள் பரவசம்...

சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்...சரணகோஷம் முழங்க, குவிந்த ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள்...

நாளை நடைபெறுகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு...தந்தி டிவியின் பிரத்யேக கழுகுப்பார்வை காட்சிகள்...

கோலாகலமாக நடைபெற்றது, உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி...அடங்க மறுத்த காளைகளை அடக்க மல்லுக்கட்டிய காளையர்...


Next Story

மேலும் செய்திகள்