இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-06-2023)

x

கூட்டணி தர்மத்தை மீறி செயல்படும் அண்ணாமலை, மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர்....அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு...

கட்சி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி ஓபிஎஸ் கட்சி நிர்வாகிகளை நீக்கி வருவதாக அதிமுக தரப்பில் வாதம்... வழக்கின் விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்...

இந்தியை திணிப்பதிலேயே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது...முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசுத் துறைகள் இயங்கி வரும் கட்டிடத்தில் தீ விபத்து....தீயை முழுமையாக அணைக்க இந்திய விமானப் படையின் உதவியை நாடியது மாநில அரசு....

மத்தியப் பிரதேசத்தில் 220 மாத கால பாஜக ஆட்சியில் 225 முறைகேடுகளை செய்துள்ளனர்...ஜபல்பூரில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...

சென்னை கே.கே நகர் வட்டார போக்குவரத்து மைதானத்தில் பயங்கர தீ விபத்து.....இரண்டு பேருந்துகள் உள்பட 6 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்.....

கொட்டித்தீர்த்த கனமழையால் நீலகிரி மாவட்டம் எல்லநள்ளி பகுதியில் திடீர் மண் சரிவு...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்...

கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை...மரம் முறிந்து, உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு...

தமிழகத்தில் 560 மது பார்களை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதால் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல்...சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தகவல்...


Next Story

மேலும் செய்திகள்