10th ரிசல்ட் ஓர் அலசல்!.. ஆச்சரியமும் - அதிர்ச்சியும்..

x
  • தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  • தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், தமிழ்நாடு முழுவதும் 91.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்
  • கடந்தாண்டை தொடர்ந்து இந்தாண்டும் பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த மாவட்டத்தில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்
  • சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீதத்துடன் தேர்ச்சி விகிதத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது
  • விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 3ஆம் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 93.51 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், இந்தாண்டு 96.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • கடந்தாண்டு 90.07 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து 91.39 சதவீதமாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்