மின்சாரம் தாக்கி 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - இரும்பு ரேக்கை தூக்கி சென்ற போது சம்பவம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எச்சூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எச்சூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா டோனிக் பழைய வீடு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ளது. இந்த வீட்டை அப்பகுதியில் உள்ள சிலர் சுத்தம் செய்த போது, இரும்பு ரேக்கை தூக்கி சென்ற சிறுவன் நரேஷ் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து விரைந்து சென்ற சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் நரேஷின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்