திருவண்ணாமலையில் 24 வது நாளாக நாட்களாக அச்சுறுத்தும் தீ..."மூச்சுத் திணறல், தோல் அரிப்பு" - பீதியில் மக்கள்

x
  • திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் உள்ள குப்பை கிடங்கில், 24ஆவது நாளாக தீப்பற்றி எரிவதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனனர்.
  • ஈசானிய மைதானத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில், கடந்த மாதம் 10ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுப்படுத்த முடியாமல், 24 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
  • குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகை மூட்டத்தால், ஜன்னத் நகர், தமிழ்மின் நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்தும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
  • தீயில் இருந்து வெளியேறும் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல், தோல் அரிப்பு ஏற்படுவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், தீயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்